இந்த வாழ்வு குறித்துச்
சொல்ல ஏதுமில்லை
அது ஒரு ஆப்பிளுக்கும்
ஏவாளுக்கும் ஆதாமுக்கும்
இடையே தோன்றும் முக்கோணத்தால் ஆனது
ஆனால் நீங்கள் கேட்கறீர்கள்
ஆனாலும் ஆனாலும்
இந்த வாழ்வு குறித்துச்
சொல்ல ஏதுமில்லை
அது உங்களுக்கும்
உங்கள் தந்தைக்கும் உங்கள் மகனுக்கும்
இடையே தோன்றும் நேர்கோட்டால் ஆனது
ஆனால் நீங்கள் கேட்கறீர்கள்
ஆனாலும் ஆனாலும்
இந்த வாழ்வு குறித்துச்
சொல்ல ஏதுமில்லை
அது உங்கள்
வயிற்றிற்கும் மனதுக்கும்
இடையே உள்ள பெரும்பாதாள
விளிம்புகளின் விட்டத்தால் ஆனது
ஆனால் நீங்கள் கேட்கறீர்கள்
ஆனாலும் ஆனாலும்
ஆனாலும் இந்த வாழ்க்கையைக் குறித்து சொல்ல எதாவது இருந்துகொண்டுதானிருக்கிறது.
ReplyDelete