Saturday, January 31, 2009

கவிதை

குழந்தை 

என் குழந்தை நேற்றிரவு திரும்பி வந்தது 
என் கண்களைப் பார்த்துக் கேட்டது 
எனை யார் கொன்றார்கள் 
நீ பாம்பு கடித்துக் செத்தாய் மகளே 
அது மீண்டும் கேட்டது 
எனை யார் கொன்றார்கள் 
நீ யானை மிதித்துச் செத்தாய் மகளே 
அது மீண்டும் கேட்டது 
எனை யார் கொன்றார்கள் 
நீ காகம் தூக்கிப் போய் செத்தாய் மகளே 
அது மீண்டும் கேட்டது 
எனை யார் கொன்றார்கள் 
நீ பூச்சாண்டி பிடித்ததால் செத்தாய் மகளே 
அது மீண்டும் கேட்டது 
எனை யார் கொன்றார்கள் 
நீ தானாகவே செத்தாய் மகளே 
நானே உனைக் கொன்றேன் 
நீ சாகவே இல்லை 
உண்மையில் நீ பிறக்கவே இல்லை 
இங்கு எதுவும் நடக்கவே இல்லை மகளே 


 - ஏதும் நடக்காதது போல் பாவனை செய்யும் என் தமிழ் சனத்தின் கள்ள மெளனத்திற்கு